'வாழை' திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் 'வாழையடி' சிறுகதையின் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை... அனைவரும் வாசிக்க வேண்டும். எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு நன்றி! இப்படிக்கு வாழை" என பதிவிட்டுள்ளார்.