நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியதற்காக சீமான் மீது நாளைக்குள் (ஆகஸ்ட்
30) வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 2-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் வேண்டும் என மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.