விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்த மத்திய அரசு

75பார்த்தது
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்த மத்திய அரசு
விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தினை விரிவுப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், விவசாய குழுக்கள், உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற தகுதியான பயனாளிகள் அதிக பயன் பெறுவார்கள். திட்டத்தின் கீழ் ரூ.47,575 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. AIF திட்ட விரிவாக்கம் விவசாய வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், பண்ணை வருமானத்தை அதிகப்படுத்தவும் உதவும்.

தொடர்புடைய செய்தி