வெந்நீரில் ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும். ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் கிடைக்கும்.