பிரபல ஹாலிவுட் நடிகர் ஜென் ஹேக்மேன் (95) மற்றும் அவரது மனைவி பெட்ஸி அரகவா (63) மர்ம முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ மெக்ஸிகோவில் உள்ள வீட்டில் நேற்று நள்ளிரவு ஜென் ஹேக்மேன், மனைவி பெட்ஸி மற்றும் அவர்களது வளர்ப்பு நாய் உள்ளிட்ட 3 சடலங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜென் ஹேக்மேன் 2 ஆஸ்கர், 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.