தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சிக் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் சந்தீப், "5 நாட்களுக்குள் தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.