HIV பாதித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்!

55பார்த்தது
HIV பாதித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்!
எச்ஐவி பாதித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிவித்துள்ளது. 1980களில் விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. அந்த நேரத்தில், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைரஸைப் பரப்பி, அவர்களுக்கும் எச்ஐவி-பாசிட்டிவ் ஆகலாம் என்ற அடிப்படையில் தாய்ப்பால் கொடுப்பது தடைசெய்யப்பட்டது. தற்போது சிறந்த சிகிச்சை முறைகள் கிடைத்துள்ளதால், தடை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.