ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸுடன் ஜோகோவிச் பலப்பரிட்சை நடத்தினார். இப்போட்டியின் முதல் செட்டை, ஜோகோவிச் 4-6 என இழந்தார். இதையடுத்து, சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 சுற்றுகளை 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.