ஆஸி., வெற்றியால் நிம்மதியடைந்த இங்கிலாந்து

72பார்த்தது
ஆஸி., வெற்றியால் நிம்மதியடைந்த இங்கிலாந்து
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 34வது லீக் போட்டி நேற்று இரவு 10.30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடந்தது. இதில், நமீபியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இதனால், இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா தோல்வியடைந்து இருந்தால் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.