போபாலின் கோவிந்தபுரா தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் பள்ளியில் தனது மகளை விட்டுச்சென்ற நபரை தெரு நாய் கூட்டமும் இரண்டு வளர்ப்பு நாய்களும் விரட்டியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கற்களைக்கொண்டு அந்த நாய்களை விரட்டினார். அப்போது அங்கு வந்த வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்காமல் பெல்ட் மற்றும் கட்டையால் அந்த நபரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகிவருகிறது.