பத்திரிகையாளர் மீது தாக்குதல் - முத்தரசன் கண்டனம்

52பார்த்தது
பத்திரிகையாளர் மீது தாக்குதல் - முத்தரசன் கண்டனம்
நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அப்பகுதியின் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதால் நேற்று சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும். சமீபத்தில் நியூஸ் 18 செய்தியாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசியுள்ளார். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி