நடிகை சாய் பல்லவியின் தங்கை நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

592பார்த்தது
நடிகை சாய் பல்லவியின் தங்கை நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
நடிகை சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பூஜா கண்ணன் தன்னுடைய காதலரான வினித் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்டார். இதில், திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முக்கியமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பூஜா கண்ணன் தமிழில் "சித்திரை செவ்வானம்" என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி