பால் அதிகம் கொடுக்காத மாட்டின் மடியை வெட்டிய விவசாயி

66689பார்த்தது
பால் அதிகம் கொடுக்காத மாட்டின் மடியை வெட்டிய விவசாயி
ஆந்திர மாநிலம், ஸ்ரீ கந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பைரப்பா. இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மாடு சரியாக பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த மாட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். மாட்டை வாங்கிய விவசாயிக்கு அந்த மாடு அதிக பால் கொடுத்துள்ளது. இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த பைரப்பா, தன்னிடம் இருக்கும்போது பால் சரியாக கொடுக்காமல், வேறு ஒருவருக்கு விற்றபிறகு அதிக பால் கொடுத்த கோவத்தில் மாட்டின் மடியை வெட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி