நடிகர் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தாமிரபரணி, பூஜை என விஷால் - ஹரி கூட்டணியில் இரண்டு வெற்றி படங்கள் வெளிவந்த நிலையில், மூன்றாவது முறையாக ரத்னம் படம் மூலம் இணைந்துள்ளனர். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.