தமிழகத்தை சார்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச. 18) அறிவித்தார். இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடமும் தனி தனியாக பேசிய பின்னரே அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு அஸ்வின் திரும்பிய போது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.