அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டிருக்கலாம். திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம். அவமானப்பட்டதால் தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வை அறிவித்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.