
ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்
ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த RCB அணி வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் சமன் செய்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்து ஏபி டி வில்லியர்ஸ் சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், தற்போது அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை அடித்து, அவரது சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்திருக்கிறார்.