திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

திருச்சி: 'கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்'- சீமான்

வ. உ. சிதம்பரம்பிள்ளையின் 88வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அதிமுக தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு: 'இதையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் நான் என்ன செய்கிறேன் என கேளுங்கள் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் அதற்கு வேலை நடக்கிறது 26 இல் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம்.  கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். சொந்த காலில் நிற்கிறோம். நூறு இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வாய்ப்பு கொடுக்க உள்ளோம். அவர் அவரோடு போறாரு இவர் இவரோடு போறாரு என இந்த கார அவர் வைத்திருந்தார் இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை. பல கட்சிகள் அதிமுகவுடன் வர இருப்பதாக எடப்பாடி சொல்வது அவருடைய நம்பிக்கை தான். மறைமுகம் என்றல்ல கள்ள உறவு என்றெல்லாம் இல்லை. நல்ல உறவு தான் நேரடி கூட்டணியில்தான் பாஜகவும் திமுகவும் இருக்கிறார்கள்' என்றார்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி