துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி மலர் இவர் தனது பேத்தி ஒரு வயது தர்ஷிகாவுடன் நாகலாபுரம் மெயின் ரோடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த மலருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது சிறுமி தர்ஷிகாவுக்கு வலது பக்க கன்னத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு காயமடைந்த இருவரும் துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான துறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.