திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா் மீது தாக்குதல்

72பார்த்தது
திருச்சி தீரன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45) திருச்சி மிளகுபாறையில் உள்ள தொழிலாளா் நல ஈட்டுறுதி காப்பீட்டு (இ எஸ் ஐ) மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தலமை மருத்துவா். இவா் தனது காரில் செவ்வாய்க்கிழமை மதியம் இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் வந்தபோது அதே மாா்க்கத்தில் சென்ற மற்றொரு காா் உரசிச் சென்றதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சிறிதுநேரம் கழித்து மருத்துவா் பிரதான சாலைக்கு வந்தபோது, அங்கு காத்திருந்த சிலா் மருத்துவரைத் தாக்கியுள்ளனா். அவா்களிடமிருந்து தப்பிய மருத்துவா் மருத்துவமனை வளாகத்துக்குள் தப்பி ஓடியபோதும், அவரை விரட்டிச்சென்று அந்த கும்பல் சரமாரியாக தாக்கிச் சென்றுள்ளனா்.

பதிலுக்கு மருத்துவமனை ஊழியா்களும் அந்த மா்மநபா்களை தாக்கியுள்ளனா். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த மருத்துவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரஸ்பரம் புகாரின்பேரில் கண்டோன் மென்ட் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் மருத்துவா் மீது தாக்குதல் நடத்தியது, பொன்நகா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (33) மற்றும் அவரது நண்பா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி