பெரம்பலூர்: முதல்வர் வருகை குறித்து ஐஜி ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகின்ற (15. 11. 2024) அன்று கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்-னுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், துணை மண்டல ஐஜி மனோகரன் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ்பசேரா ஆகியோர் ஆய்வு செய்தார்கள் இந்நிகழ்வின் போது பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாகரன் மாவட்ட கழக செயலாளர்ஜெகதீசன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர் , துணை அமைப்பாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.