பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூர்: வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுவாச்சூர், செஞ்சேரி, எசனை ஆகிய இடங்களில் BLA-2, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக் கூட்டம், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளரும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தொகுதி பார்வையாளர் தங்க. சித்தார்த் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்தும், 2026- சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் BLA-2, வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் ஆய்வு நடத்தி குறைகளை கேட்டறிந்தனர். இதில் கவுல்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் செங்குணம் கலையரசன், எஸ். ராமலிங்கம், கல்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன், ஜோ. அழகேசன், மாவட்ட பிரதிநிதி எஸ். அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா. சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


பெரம்பலூர்