பெரம்பலூர்: இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான முகாம்
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (22. 11. 2024) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வழங்கப்பட்டு, வாக்காளர் சேவைக்கான செயலி மூலம் தங்கள் தகவல்களை பதிவு செய்து, வாக்காளர்களாக தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விளக்கங்களும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் செயலி மூலம் வாக்காளர்களாக பதிவு செய்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு காணொளி மாணவ, மாணவியர்களுக்கு திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.