பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் (21. 11. 2024) தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கர்ப்பிணிகள் பேறுகால இறப்பு, சிசு மரணம், இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அதனை எவ்வாறு இனிவரும் காலங்களில் தடுக்கலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. கே. மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர், மரு. எம். கீதா, துணை இயக்குநர் குடும்ப நலம் மரு. ராஜா, துணை இயக்குநர்(தொழுநோய்) மரு. சுதாகர், துணை இயக்குநர் (காசநோய்) மரு. நெடுஞ்செழியன் மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.