மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

2937பார்த்தது
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 21. 02. 2024 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுவைப் பெற்றார்கள்.

மேலும் மனு அளித்த பொதுமக்களிடம் பேசிய துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுதாரரின் புகாரினை கேட்டறிந்து அப்புகாரினை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 25 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி