ரூ. 1.17 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

2237பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதியில் இதுவரை ரூ. 1, 17, 37, 451 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தகவல்.

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் தெரிவிக்கும் போது,

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 903 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இணைய வழியில் கண்காணிக்கும் வகையில், வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று 8,290 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 14,46,352 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுவினர் மூலம் ரூ. 1,17,37,451 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி