ஆட்டோவில் பயணித்த பைக் மீது துப்பிய பெண்.. (வீடியோ)

64பார்த்தது
சிலர் பொது இடங்களில் வினோதமாக நடந்து கொண்டு அனைவரையும் திடுக்கிட வைக்கின்றனர். சமீபத்தில், இதுபோன்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இரு பைக் ரைடர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு ஆட்டோ அவர்களை முந்திக்கொண்டு முன்னால் சென்றது. ஆட்டோவில் பயணித்த இளம் பெண் ஒருவர் தலையை வெளியே நீட்டி பைக் மீது குட்காவை துப்பினார். உடனே ஆத்திரமடைந்த பைக் ரைடர்கள் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி அப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்தனர். அப்பெண் வேண்டுமென்றே தங்கள் மீது துப்பியதாக இளைஞர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணோ, எதேச்சையாக குட்காவை துப்பியதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் மறுக்கிறார்.

பைக் ரைடர்கள் மீது அப்பெண்ணுக்கு அப்படி என்னதான் கோவமோ தெரியவில்லை, நன்றாக பழிவாங்கி விட்டார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.