*காணாமல் போன பைனான்சியர் எரித்துக் கொலையா?! போலீசார் விசாரணை*
தஞ்சை மாவட்டம் கஞ்சனூரை சேர்ந்த பைனான்சியர் சிவா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடையில் பைனான்சியர் சிவா பாதி உடல் எரிந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பணம் வரவு, செலவு வைப்பதில் முன் விரோதம் காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.