அரியலூரில் பரபரப்பு: டாஸ்மாக் கடையை பூட்டிய பெண்:

54பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மனைவி கமலிக்கண்ணு. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே கமலிக்கண்ணு அவரது சொந்த இடத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இதில் கமலிக்கண்ணு பெட்டி கடையில் பார் நடத்தி வருவதாகவும், பதுக்கி வைத்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டி கடை அருகே வீட்டில் இருந்த இரண்டு பேரை போலீசார் விசாரணைக்காக மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்து கமலிக்கண்ணு கைது செய்த இரண்டு பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும், அரசு டாஸ்மாக் கடையை காலிசெய்ய வலியுறுத்தி அரசு மதுபான கடையை அரசு ஊழியர்களை உள்ளேயே வைத்து கடையை பூட்டினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கமலிக்கண்ணு மீது டாஸ்மாக் ஊழியர்கள் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி