தைலமர தோப்பில் தீ விபத்து: 20 ஏக்கர் எரிந்து நாசம்: (வீடியோ)

80பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த தோப்புகளுக்கு அருகில் சில விவசாயிகள் தங்களது வயலில் ஆழ்துளை கிணறு அமைத்து, தமிழக அரசின் இலவச மின்சாரத்தை பெற்றுள்ளனர். இதற்கான மின்பாதை தைல மரத்தோப்பு வழியாக செல்வதால் தைல மரங்கள் மின்கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியபோது தைல மரங்கள் மீது மின் கம்பிகள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு தைலமர தோட்டத்தில் தீ பற்றி கொழுந்து விட்டு இருந்தது இதை கண்ட விவசாயிகள் ஓடி வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் உடனடியாக மின் ஊழியர்கள் அங்கு வரவில்லை என்றும், மேலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மின் பாதையை மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனையாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி