இந்திய பள்ளிக்கல்வி குழு நடத்தும் 67 வது தேசிய அலுவலர் இட்பால் போட்டி புது டெல்லியில் 3ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பரமேஸ்வரன், கிருத்திகா, கனிஷ்கா, கோபிச்சந்த், சின்ன வளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ் , தளவாய் டி எஸ் என் பள்ளி மாணவர்கள் சந்தீப், முத்துக்குமரன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர். மேலும் தமிழக அணி பயிற்சியாளர் ஜெயங்கொண்டம் கார்த்திக் ராஜன் , சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன், பரப்பிரமம் பவுண்டேஷன் நிறுவனம், அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தாளாளர் பரப்பிரமம் முத்துக்குமரன், தனியார் ஓட்டல் உரிமையாளர் ஆர்கே சண்முகம் பள்ளி துணை முதல்வர் தாரணி மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை புதி0டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.