உங்களுக்கு திடீரென அவசர தேவையாக பணம் தேவைப்படும்போது ஓவர்டிராப்ட் வசதி மூலம் பணம் பெறலாம். ஓவர்டிராப்ட் வசதி என்பது அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பலவற்றிலும் வழங்கப்படுகிறது. நீங்கள் சம்பளதாரர் எனில் உங்களது சம்பளத்திற்கு எதிராக ஓவர்டிராப்ட் செய்யலாம். இது உங்களது சம்பளத்தில் 2 - 3 மடங்கு பணம் கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இது ஷார்ட் டெர்ம் லோன் எனலாம். இதனை உங்களது சம்பள கணக்கு உள்ள வங்கிகளில் பெறலாம்.