சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், தீட்டப்பட்ட தானியங்கள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீரிழிவை ஏற்படுத்தும். ஆனால் தாவர உணவுகளை உண்பதால் ரத்த சர்க்கரை அளவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதும், சிறுநீரகம், ஈரல் ஆகிய உடல் உறுப்புகளின் செயல்பாடும் ஊக்கப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. தாவர உணவுகளை உட்கொண்டால் டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 24% குறைவு என ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.