நூல்கோலில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நூல்கோலை அதிகம் சாப்பிடலாம். இதன் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்கிறது. நூல்கோல் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அந்தோசைனின் மாரடைப்பு மற்றும் தமனி விறைப்பு அபாயத்தை குறைக்கும். இதை சூப்பாக குடித்து வருபவர்களுக்கு சிறுநீர் நன்றாக பிரியும். எனவே சிறுநீர் பாதை தொற்றும் ஏற்படாது.