பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

557பார்த்தது
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில், திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. புதிய நீதி கட்சி வேலூர், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ராமநாதபுரத்திலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி, தேனி, தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி