சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு

67350பார்த்தது
சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு
சென்னையில் பாஸ்பரஸ் வெடித்ததில் பிளஸ் 2 பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. வேதியியலில் அதிக ஆர்வம் கொண்ட பிரணவ் என்ற அந்த மாணவர் பாஸ்பரஸ் வேதிப் பொருளைக் கொண்டு சோதனை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அது வெடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி