கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மகளிர் பேரணி நடத்திய பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டயளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பேரணி மூலமாக மக்களிடம் ஆதரவை கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமர் மோடி திட்டம் மட்டும் போடவில்லை அதை கடைசி வரை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். நல்ல ஒரு பிரதமர், நல்ல ஒரு மாநில தலைவரால் மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைக்க போகிறது. மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் அண்ணாமலை மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.