கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று (ஆக.26) அளித்த பேட்டியில், “ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு, அண்ணாமலைக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது. தமக்கு தலைமை பொறுப்பு இருக்காது, எனவே இருக்கின்ற வரையில் எதையாவது கருத்தை சொல்லிவிட்டு செல்லலாம் என அண்ணாமலை நினைக்கிறார். நிச்சயமாக தலைமை உணர்ந்து, விரைவில் அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள்” என்றார்.