சினிமாவில் நடிக்கும் அண்ணாமலை (வீடியோ)

132514பார்த்தது
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள ‘அரபி’ என்ற கன்னட படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்தும் அண்ணாமலையின் நடிப்பு குறித்தும் அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜ்குமார் பகிர்ந்துள்ளார். இரு கைகளை இழந்த ஒருவர் நீச்சல் போட்டியில் சாதிக்கும் கதைக்களத்தை கொண்டு படம் நகரும். அவருக்கு பயிற்சியளிக்கும் ஒருவராக அண்ணாமலை நடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் ஒரு பாடல் காட்சி மற்றும் 5 காட்சிகளை அண்ணாமலையை வைத்து எடுத்தோம் என இயக்குனர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி