அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மூலம் 2001 - 2002ஆம் கல்வியாண்டில் இருந்து பொறியியல் படிப்பில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர், டிசம்பர் 2024 சிறப்பு அரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 18-ம் தேதி நிறைவடைய உள்ளது.