முதலைகள் சாப்பிடும்போது அழுகிறது என்ற திடுக்கிடும் உண்மை 2006-ல் நரம்பியல் விஞ்ஞானி மால்கம் ஷனர் மற்றும் விலங்கியல் நிபுணர் கென்ட் ஆகியோர் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஒரு முதலை மெல்லும்போது, அதன் தாடைகளின் இயக்கம் அதன் சைனஸில் காற்றைத் தள்ளுகிறது. இதன் விளைவாக, முதலைக் கண்ணில் லாக்ரிமல் சுரப்பி எரிச்சலடைகிறது. அப்போது கண்ணீர் வரும். எனவே முதலை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அழுகிறது.