கீழடியில் பத்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியில் உருளை வடிவத்தைக் கொண்ட டெரகோட்டா குழாய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர்.சிவானந்தம்," சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெரகோட்டா குழாய், ஆறு உருளை வடிவில் ஒன்றன் மீது ஒன்று பொருத்தப்பட்டு, நீண்ட குழாயாக அமைக்கப்பட்டுள்ளது. குழாயில் உள்ள ஒரு உருளையின் நீளம் 36 செமீ மற்றும் அகலம் 18 செ.மீ. இது வடிகால்களாகவோ அல்லது நீரை சேமித்து வைக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.