மத்திய பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ரீல்ஸ் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் தனது கழுத்தில் கயிறை இறுக்கி கட்டிக்கொண்டு நடிக்க, சக நண்பர்கள் அதனை படமெடுத்துள்ளனர். ஆனால் கயிறு இறுக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதை நடிப்பு என நினைத்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இதனால் அந்த சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.