"150 மாவட்ட ஆட்சியர்களை மிரட்டிய அமித்ஷா"

66பார்த்தது
"150 மாவட்ட ஆட்சியர்களை மிரட்டிய அமித்ஷா"
150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான தகவல், ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷ்க்கு, இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. ஆதாரங்களை தர ஒருவார காலம் அவகாசம் கேட்ட ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெய்ராம் ரமேஷ், இன்று இரவு 7 மணிக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி