வங்கதேசத்தில் அமைக்கப்படும் இடைக்கால அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளது தமது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இடைக்கால அரசு அமைதியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துமென நம்புவதாக கூறப்பட்டுள்ளது.