எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மற்றொரு படி முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், முதன்முறையாக ஒரு மனிதனின் (அர்பாக்) மூளையில் மின்னணு சிப் பொருத்தப்பட்டது. சமீபத்தில், இரண்டாவது நபருக்கும் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நபரின் மூளையில் 400 மின்முனைகள் திறமையாக செயல்படுவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார். டிசம்பர் 2024க்குள், மேலும் 8 பேரின் மூளையில் சிப் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.