ராமனுக்கு இணையான புகழ் இருப்பினும் `தம்பியின் மனைவியை அபகரித்தவன்' என்கிற காரணத்தால் வீழ்ந்த வாலியின் இதிகாசக் கதையை நவீன காலத்துக்கு ஏற்ப ஹைடெக் கலர் கொடுத்த படம் ‘வாலி’. இதில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்தார். அதிலும் ’தேவா’ என்ற கேரக்டரில் நடிப்பில் மிரட்டியிருப்பார். கமலுக்கு பிறகு அழகான நாயகன் என கொண்டாடப்பட்ட அஜித் வெறும் 28 வயதில் இப்படத்தில் குரூர வில்லனாக நடித்தார். அவர் திரையுலக வாழ்வில் மைல்கல் ‘வாலி’.