சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் இன்றும், நாளையும் (ஆக, 28,29) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் செப்டம்பர் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் செப்டம்பர் 1ம் தேதி காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு பயணிகள் ரயில் செப்டம்பர் 1ம் தேதி திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.