தினமும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம் பாடுவதால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்கும் என்று சொல்லப்படுகிறது. முருகனின் கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம்முடன் நேர்மறை ஆற்றல் பரவி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும் மற்றும் நாம் செய்யும் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி முருகனின் பெயரால் அனைத்து நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். வீட்டில் தரித்திரம், செய்வினை, பில்லி, சூனியம் போன்றவை அடியோடு அழிந்து விடும்.