9ஆம் தேதி கூட்டணியை இறுதி செய்ய அதிமுக முடிவு

110748பார்த்தது
9ஆம் தேதி கூட்டணியை இறுதி செய்ய அதிமுக முடிவு
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, வரும் மார்ச் 9ஆம் தேதி கூட்டணியை இறுதி செய்ய முடிவு அதிமுக திட்டமிட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இதுவரை எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை. விரைந்து கூட்டணியை இறுதி செய்ய அதிமுக முடிவு செய்துள்ளதால், பாமகவுக்கு 6-7, தேமுதிகவுக்கு 3-4 தொகுதிகளும், சமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக மீதமுள்ள 25-27 இடங்களில் நேரடியாக அதிமுக போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி